301 திருப்பி மற்றும் 302 திருப்பி பக்கங்கள் (Re-direct) என்றால் என்ன?

301 திருப்பி மற்றும் 302 திருப்பி பக்கங்கள் (Re-direct) –  ஒரு டொமைன் பெயரை நீங்கள் மற்றொரு இணையதளத்திற்கு திருப்பி அனுப்பவோ அல்லது மறைத்து  திருப்பி அனுப்பவோ முடியும்.

301 திருப்பி பயன்படுத்தி உங்கள் டொமைன் பெயர் திருப்பி அனுப்பும் போது, நீங்கள் குறிப்பிட்ட  அந்த தளத்திற்கு உங்கள் பார்வையாளர்கள் “301 நிரந்தரமாக நகர்த்தப்பட்டது”  என்கிற செய்தியுடன் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

301 திருப்பி மற்றும் 302 திருப்பி பக்கங்கள் (Re-direct) என்றால் என்ன?

301 திருப்பி பயன்படுத்தினால், அந்த திருப்பியை நீங்கள் நீக்கவோ அல்லது எந்த நேரத்திலும் அதை மாற்றி அமைக்க முடியும்.

302 திருப்பி – உங்கள் தளத்தின் பார்வையாளர்கள்  “302 Found” HTTP என்கிற குறியீட்டுடன் திருப்பி அனுப்பப்படுவார்கள்.  HTTP 302 குறியீடு,  உங்களின் பயனர் முகவர் (தேடு பொறிகள் (Search Engine) உட்பட) உங்களின் தளம் தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளது என்பதை அவர்களுக்கு அறிவிக்கும்.

ஒரு 301 திருப்பி – வணிக அல்லது அதன் தொடர்புடைய தளங்களில் உங்கள் டொமைன் பெயரை சுட்டி காட்டி ஒரு நீண்ட கால தீர்வு அதற்கு வழங்க முடியும்.

302 திருப்பி – உங்களுடைய நிரந்தர இணையத்தை உருவாக்கி, அந்த பணி நிறைவடையும் வரை  உங்கள் டொமைன் பெயரை தற்காலிக பக்கம் அல்லது வேறு ஒரு இணையத்திற்கு திருப்பி அனுப்ப செய்யலாம்.  இந்த 302 குறியீடு, உங்கள் வலைத்தளத்தை தற்போதைய இடத்தில் (தற்காலிகமாக) பார்க்க எவ்வளவு காலம் பார்க்க முடியும் என்று தேடுபொறிகள்களுக்கு (Search Engines ) வேறுபடுத்திக் காட்ட உதவும்.

உங்களின் வலைப்பக்கத்தில் ஒரு பக்கத்தை மாற்றி அமைத்தாலோ அல்லது உங்களின் வலைதளத்தின் பெயரை மாற்றினாலோ இந்த 301 திருப்பி தானாகவே உங்களின் பார்வையாளர்கள் மற்றும் தேடுபொறிகள் திருப்ப உதவுகிறது. இதன் மூலம் உங்கள் தளத்தின் தரவரிசை எந்த விதத்திலும் பாதகம் விளைவிக்காது.

உதாரணமாக, நீங்கள்  “http://www.newdomain.com/oldpage.பிப்” என்கிற உங்களின் பக்கத்திற்கு வரும் உங்களின் பார்வையாளர்கள் மற்றும் தேடுபொறிகளை திசை திருப்பி “http://www.newdomain.com/newpage.php ” பக்கத்திற்கு அனுப்ப முடியும். மேலும் இது உங்கள் தேடுபொறி தரவரிசை மற்றும்  இணைப்புகளை அப்படியே வைத்திருக்க உதவும்.

உங்கள் பக்கங்களுக்கு வரும் பார்வையாளர்களை திசைதிருப்ப பின்வரும்  301 திருப்பி குறியீட்டை பயன்படுத்தவும்.
கீழே உள்ள உதாரணங்களில், “oldpagename ” என்கிற உங்களின் பழைய பக்கத்தை “newpage.html ” எப்படி திசை திருப்ப வேண்டும் என்பதை விவரிக்கும். இந்த குறியீட்டில், அந்த பக்க பெயர்களை மாற்றி உங்கள் தளத்திற்கு ஏதுவாக மாற்றிக்கொள்ளவும். இதற்கு உங்களுக்கு வெப்டொமைன்குரு என்றும் உறுதுணையாக இருக்கும். உங்களுக்கு உதவிகள் தேவைப்படும் எனில்,  help@vangablogalam.com அல்லது support@webdomainguru.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

PHP

இந்த குறியீட்டை சேர்த்த பிறகு, இறுதியாக oldpagename.php என்கிற பெயரில் சேமிக்க விடும்.

<?php>
header("HTTP/1.1  301 Moved Permanently");
header("Location: http://www.newdomain.com/newpage.html");
exit();
?>

ASP

இந்த குறியீட்டை சேர்த்த பிறகு, இறுதியாக oldpagename.asp என்கிற பெயரில் சேமிக்க விடும்.

<%@ Language=VBScript %>
<%
Response.Status="301 Moved Permanently"
Response.AddHeader "Location", "http://www.new-url.com"
%>

ASP.NET

இந்த குறியீட்டை சேர்த்த பிறகு, இறுதியாக oldpagename.aspx என்கிற பெயரில் சேமிக்க விடும்.

<script language="c#" runat="server">
private void Page_Load(object sender, System.EventArgs e)
{
Response.Status = "301 Moved Permanently";
Response.AddHeader("Location","http://www.new-url.com");\
}
</script>

.htaccess

லினக்ஸ் சர்வர் உடன் அப்பாச்சி மோட்-ரீரைட் module பயன்படுத்தும் போது, .htaccess என்கிற கோப்பை உருவாக்கி அல்லது அந்த கோப்பை மாற்றி அமைத்து இதனை செயல்படுத்த முடியும். உதாரணம், உங்களின் தளம் coolexample.com க்கு வரும் எல்லா கோரிக்கைகளையும் www.coolexample.com என்கிற முகவரிக்கு திருப்பி அனுப்ப முடியும்.

RewriteEngine on
rewritecond %{http_host} ^coolexample.com [nc]
rewriterule ^(.*)$ http://www.coolexample.com/$1 [r=301,nc]

IIS on VPS or dedicated server

விண்டோஸ் சர்வர் பயன்படுத்தும் போது, நீங்கள் ஐஐஎஸ் பயன்படுத்தி ஒரு 301 பக்கம் திருப்பிவிட முடியும்.

  • உங்களின் கணக்கில் உள்நுழைந்து. இணைய சேவைகள் மேலாளர் (Internet Services Manager) சென்று,
    நீங்கள் திருப்ப விரும்பும் பைல் அல்லது போல்டர் தேர்ந்துஎடுக்கவும்.
  • வலது கிளிக் மெனுவில் இருந்து, URL க்கு திருப்பிவிட தேர்வு செய்யவும்.
  • நீங்கள் திருப்பிவிட விரும்பும் பக்கத்தின் கோப்புப்பெயரை குறிப்பிடவும்.
  • மேலே உள்ளிட்ட சரியான URL ஐ தேர்ந்தெடுக்கவும்.
  • நிரந்தர திருப்பிவிட தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
  • விண்ணப்பிக்கவும் (apply) கிளிக் செய்யவும்.
  • Add Your Comment

Close